July 25, 2007
அனிமேஷன் திரைப்படம் சுல்தான - தி வாரியர் தொடர்பாக பணி இருப்பதால் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும் ரஜினி, வழியில் ப்ருசெல்ஸிற்கு விஜயம் செய்வார் எனத் தெரிகிறது. இந்த அனிமேஷன் திரைப்படத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா உருவாக்குகிறார். அப்பா-மகள் இருவருமே திரைப்படத்தின் முதல் கட்ட கார்ட்டூன் வரைபடங்கள் உருவாக்கத்திற்காக ப்ரூசெல்ஸ் செல்கிறார்கள்.
சுல்தான் -தி வாரியர் திரைப்படத்தை அட்லாப்ஸ் மற்றும் ஆச்சர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். இயக்கம் சௌந்தர்யா ரஜினிகாந்த். இத் திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார், ஒரு அனிமேஷன் சூப்பர்மேனாக வருகிறார். திரைப்படம் 2008 இறுதியில் திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள Ħ