July 26, 2007
வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த திரைப்படத்தின் பெயர் தேசிய நெடுஞ்சாலை 47. இசை யுவன் ஷங்கர் ராஜா. சென்னை 600028 திரைப்படம் வாயிலாக தன் இயக்குநர் திறமையை நிரூபித்த நடிகர் வெங்கட் பிரபு தேசிய... திரைப்படத்துக்கான கதையை முடிவு செய்துவிட்டார். திரைப்படத்தில் புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.
திரைப்படத்தை ஒரு புதிய நிறுவனத்தினர் தயாரிக்கிறார்கள். கதை, இயக்கம் வெங்கட் பிரபு.
தேசிய நெடுஞ்சாலை திரைப்படமும் சென்னை 600028 போல வெற்றி படமாக அமையுமா?