July 26, 2007
வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நடித்த அழகு கதாநாயகி கமலினி முகர்ஜி கண்ணாமூச்சி ஏனடா மற்றும் கரு பழனியப்பாவின் பிரிவோம் சந்திப்போம் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.
ஒரு திரைப்படத்திற்கு தேதிகள் இல்லை என சொல்லும் கமலினி, பிரிவோம் சந்திப்போம் கதை பெரிதும் மாறிவிட்டதாக சொல்கிறார்.
இப்போது இவர் பாரதிராஜா ஸ்கிரிப்ட் எழுதியிருக்கும் ஒரு தெலுங்கு திரைப்படத்திலும், முன்னணி கதாநாயகர்களுடன் வேறு இரண்டு படங்களிலும் அதில் ஒரு திரைப்படத்தில் கௌரவ வேடத்திலும் நடிக்கிறார். தமிழ் திரைப்பட ஸ்கிரிப்ட் ஒன்றையும் பரிசீலித்து வருகிறார் கமலினி.