July 26, 2007
மீரா ஜாஸ்மின் இன்னொரு வதந்திக்கு பலியாகியுள்ளார். முன்னதாக மீரா ஜாஸ்மினுக்கும் மலையாள இயக்குநர் லோகிதாஸுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இப்போது மீரா ஜாஸ்மின் ஹைதராபாத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
கல்கத்தாவில் படபிடிப்பில் உள்ள மீரா ஜாஸ்மின் இந்த செய்தியை அடியோடு மறுத்துள்ளார். சென்னை திரும்பியதும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விபரம் அறிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.
பல நட்சத்திர திருமணங்கள் வதந்திகளாகத்தான் ஆரம்பித்தன என்று சொல்ல வேண்டுமா என்ன? இந்த வதந்திகளுக்கு பின்னால் உண்மை உள்ளதா? மீரா தன் கருத்தை சொல்லும் வரை கா