July 26, 2007
முதலமைச்சர் திரு மு.கருணாநிதி அவர்களின் மனதில் இன்னுமொரு அன்பு பதிவை ஏற்படுத்தியுள்ளார் ரஜினிகாந்த். சூப்பர்ஸ்டார் மேல் அன்பு கொண்ட தமிழக முதல்வர் ரஜினியின் புகழ் பாடி கவிதை ஒன்றை இயற்றியுள்ளார்.
பெரியார் திரைப்படத்தை ஏற்கனவே பார்த்த ரஜினி அத் திரைப்படத்தை வானளாவ புகழ்ந்துள்ளார். ஒரு ஆன்மிகவாதியிடமிருந்து ஒரு நாத்திகர் பற்றிய திரைப்படம் குறித்து எழுந்த பாராட்டுகளால் கவரப்பட்ட கலைஞர் கவிதை பாடியுள்ளார்.
இக் கவிதை ரஜினியின் குணங்கள், நேர்மை, ஒழுக்கமான வாழ்க்கை அனைத்தையும் புகழ்வதோடு இருவரிடையேயான நட்பையும் சிலாகிக்கிறது.