July 27, 2007
அனைவராலும் மிக எதிர்பார்க்கப்படும் ஒரு சுவாரஸ்யமான திரைப்படத்தின் விமர்சனம் வெளி வந்துவிட்டது என சொல்லலாம். தசாவதாரம் திரைப்படத்தின் ரஷ்களை பார்த்த தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், திரைப்படம் பற்றிய தன் கருத்துக்களை பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.
திரைப்படத்தின் தலைப்பு சொல்வதைப் போல இந்த திரைப்படத்தில் கமல்ஹாஸன் பத்து வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார். இவை பற்றிய செய்திகள் இனிமேல்தான் அறிவிக்கப்படும். இந்த கதாபாத்திரங்களில் ஒரு வயதான மனிதர், அமெரிக்க ஜனாதிபதி புஷ், ஒரு வயதான பெண்மணி வேடம், ஜப்பானிய ஒப்பனையுடன் ஒரு நகைச்சுவை வேடம் ஆகியவை அடக்கம். இயக்குநர் K.S. ரவிகுமார் இயக்க&