செய்தியின் தலைப்பே சேதியை சொல்லிவிட்டதே? ரசிகர்களின் வரவேற்புகளுடன் கிரீடம் திரைக்கு வந்தாலும் தமிழகத்திலும் ஆந்திரவிலும் தொடர்ந்து தன் கிரீடத்தை அணிந்துகொண்டுதான் இருக்கிறார் சிவாஜி. இதற்கு டிக்கெட் கிடைப்பது அதிலும் வாரக் கடைசிகளில் கிடைப்பது இன்றும் குதிரைக் கொம்பாகத்தான் உள்ளது. திரும்பத் திரும்ப காணும் ரசிகர்கள் சிவாஜிக்கு ஏராளம்.
முதல் வாரத்தில் சிவாஜியை பார்த்தவர்கள் ரசிகர்களின் சந்தோஷ ஆரவாரத்தால் படத்தின் வசனங்களை சரியாக கேட்க முடியவில்லை என்றால் , இப்போது பார்க்கும்போது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதினை அருகிலுள்ள ஆர்வ ரசிகர்கள் அறிவித்துவிடுகிறார்கள்-விமான அறிவிப்புக