பொய்க் காரணங்கள் சொன்னால் நடிகர்களுக்கு பிரச்சனைகள்?
July 27, 2007
தமிழ் சினிமா 75 வருடங்கள் நிறைவினை ஒட்டி பிரம்மாண்டமான விழா ஒன்றினை ஏற்பாடு செய்கிறது நடிகர் சங்கம். இதில் பல நடிக நடிகையர் கலை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளார்கள். ஆனாலும் ஒரு சில காரணங்கள் சொல்லி விழாவில் பங்குகொள்ளாத சில நடிக நடிகையர் இருக்கிறாகள்.
சரியான காரணங்கள் இல்லாமல் விழாவை புறக்கணிக்கும் நடிக நடிகையர் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது நடிகர் சங்கம். தென்னிந்திய திரைப்பட சங்கம்-FEFSI, தயாரிப்பாளர்கள் கவுன்சில் ஆகிய அமைப்புகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறது நடிகர் சங்கம்.