July 27, 2007
தெரு கிரிக்கெட்டை மையமாக வைத்து வசூலை அள்ளிக் குவித்த வெற்றி திரைப்படம் சென்னை-600028, ஆகஸ்டு 5, 2007 அன்று 100 நாளைத் தொடுகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக, காபிடல் ஃபில்ம் வொர்க்ஸ், டெக்ஜோன் 6060 இரண்டும் இணைந்து CFW 6060 கிரிக்கெட் கோப்பைக்கான போட்டியை நடத்துகின்றன.
இதற்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு கூட்டம் சமீபத்தில்Â நடந்தது. இதில் S.P.B. சரண், வெங்கட் பிரபு மற்றும் திரைப்படத்தின் மற்ற நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். ஆகஸ்டு 2, 2007 முதல் ஆகஸ்டு 4, 2007 வரை நடைபெறும் 10 ஓவர்கள் போட்டிகளில் 32 குழுக்கள் பங்குபெறுகின்றன.
அனைத்து போட்டிகளும் இரவு-பகல் போட்டிகளாக நந்தனம், YMCA மைதானத்தில் நடைபெறும். போட்டிகளில் ஜெயிக்கிற குழு சென்னை-6000028 குழுவுடனĮ