July 30, 2007
தனுஷ், திவ்யா(குத்து ரம்யா) ஜோடியாக நடிக்கும் பொல்லாதவன் திரைப்படத்தின் படபிடிப்பு துவங்கிவிட்டது.
இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தின் பழைய சூப்பர் ஹிட் பாடல், 'எங்கேயும் எப்போதும்' (திரைப்படம்-நினைத்தாலே இனிக்கும்) ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. பழைய பாடலைப் போலவே ரீமிக்ஸ் பாடலையும் S.P.B. பாடியுள்ளார். ரீமிக்ஸ் பாடலின் படபிடிப்பும் பழைய பாடலைப் போலவே AVM ஸ்டுடியோவில் நடைபெற்றது.
இருபது வருடங்கள் முன்னால் பொல்லாதவன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய அதே காரைத்தான் புதிய பொல்லாதவன் திரைப்படத்திலும் தனுஷ் பயன்படுத்தியுள்ளார்.
இசை G.V. பிரகாஷ். தயாரிப்பு புதிய தயாரிப்பு நிறுவனம் க்ரூப் கம்பெனி.