July 30, 2007
புதிய தோற்றங்கள், புது மாதிரியான உடல் அசைவுகள் என எப்போதுமே பரிசோதிக்கும் விக்ரம் கந்தசாமி திரைப்படத்தில் பெண் வேடம் அணிகிறார். இது தொடர்பாக இயக்குநருடன் சேர்ந்து பல தோற்றங்களை பரிசீலித்த பிறகு ஒரு அழகிய இளம் பெண் தோற்றத்தை தேர்ந்தெடுத்துள்ளார் விக்ரம்.
விக்ரமின் செலக்ஷனில் ஒட்டு மொத்த கந்தசாமி படக்குழுவும் அசந்துவிட்டதாம். இந்த வேடத்துக்காக விக்ரமின் கவனமான முயற்சிகள் படக்குழுவை அசத்திவிட்டதாம்.
கந்தசாமியிலும் கண்டிப்பாக நாம் ஒரு வித்தியாசமான விக்ரமை கண்டு ரசிக்கலாம்.