August 24, 2007
உன்னாலே உன்னாலே திரைப்படத்தில் நடித்த பெங்களூரைச் சேர்ந்த அழகுப் பையன் வினய், ஹைதராபாத் பெண்களின் இதயங்களையும் கவரப் போகிறார்.
M.S. ராஜு தயாரிக்கும் வான என்ற திரைப்படத்தில் நிலாவுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார் வினய். கன்னட வெற்றி படம் முங்கரு மலே. இதன் தெலுங்கு ரீமேக்தான் வான. படபிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.
வினய் தெலுங்கு ரசிகர்களுக்கு புதியவரல்ல. இவரது உன்னாலே உன்னாலே திரைப்படம் நீ வல்லே நீ வல்லே என்று தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. நிலாவும் டோலிவுட்டுக்கு புதியவரல்ல. ஆனால் சத்யம் ஷிவம் சுந்தரம் திரைப்பட தயாரிப்பாளரோடு பிரச்சனை காரணமாக சிறிது காலம் டோலிவுட்டிலிருந்து விலகியிருந