August 27, 2007
சச்சின் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் கதிர் திரைப்படத்தின் தொடக்க விழா AVM ஸ்டுடியோவில் ஆகஸ்டு 23 அன்று நடைபெற்றது.
கதிர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் V.T. ஜனார்தனன். கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் விஸ்வாஜெகன். இசை ஸ்ரீகாந்த் தேவா.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக கதிர், கதாநாயகியாக பானு என இரண்டு புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். இத்திரைப்பட தொடக்க விழாவில் திரையுலகம் மற்றும் வியாபார உலகைச் சார்ந்த பல பிரபலங்கள் கலந்துகொள்வார்கள்.