August 27, 2007
டிஸ்னி-பிக்ஸர் ஃபிலிம் தயாரிப்பான ரட்டட்டௌலி திரைப்படத்தின் பிரிமியர் காட்சி சத்யம் சினிமாஸில் நேற்று நடைபெற்றது.
ஒரு செஃபாக ஆசைப்படும் ஒரு எலியைப் பற்றிய அனிமேஷன் கதைதான் ரட்டட்டௌலி. அமெரிக்க தொலைக்காட்சியின் பல பிரபலங்கள் பின்னணி குரல் கொடுத்திருக்கும் இந்த திரைப்படம் நிச்சயம் கண்டு ரசிக்கப்பட வேண்டிய ஒன்று.
விழாவில் கலந்துகொண்ட லேகா வாஷிங்டன், SS ம்யூசிக் VJ கிரேக், தொலைக்காட்சி நடிகர் விஜய் ஆதிராஜ்(குடும்பத்துடன் வந்திருந்தார்) ஆகியோரும் இதே கருத்தையே தெரிவித்தனர். பிரிமியர் காட்சிக்கு நடிகை குஷ்பூ தன் மகளுடன் வந்திருந்தார்.