August 27, 2007
கரு பழனியப்பாவின் பிரிவோம் சதிப்போம் திரைப்படத்தில் எந்த விதமான வியாபார அம்சங்களும் இல்லை.
படத்தில் சேரன், சினேகா இவர்களுடன் 35 பிரபல நடிகர்கள் நடித்தாலும் யாரும் கதாநாயகனோ கதாநாயகியோ கிடையாது. திரைப்படத்தில் கனவு பாடல் காட்சிகளோ சண்டைக் காட்சிகளோ கிடையாது.
கதை ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில் நிலவும் பல்வேறு உறவுகளைப் பற்றியது.
திரைப்படத்தை A. சுபாஸ்கரன் மற்றும் ராஜு மகலிங்கம் தயாரிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் கரு பழனியப்பன்.