August 27, 2007
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் சூப்பர் டைரக்டர் மணிரத்னமும் இணைந்து ஒரு திரைப்படம் செய்ய திட்டமிடுகிறார்கள் என்பதே கோலிவுட் வட்டாரத்தின் இப்போதைய சூடான சேதி.
ஷங்கரின் சிவாஜி மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து ரஜினியின் அடுத்த திரைப்படம் என்ன என்று ரஜினி ரசிகர்களும் ஒட்டு மொத்த இந்தியாவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
ரஜினி முன்னதாக மணிரத்னத்தின் தளபதி திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் ரஜினியின் இமேஜுக்கு ஒரு புதிய பரிமாணம் கொடுத்தது.
அடுத்த திரைப்படம் பற்றி விவாதிக்க ரஜினியும் மணிரத்னமும் இரண்டு முறை சந்தித்து பேசியதாக சொல்கிறார்கள்.<