August 27, 2007
பொல்லாதவன் படபிடிப்பின் போது தனுஷுக்கு காயம் ஏற்பட்டது.
டேனியல் பாலாஜி மற்றும் தனுஷ் தொடர்பான காட்சி படபிடிப்பின்போது டேனியல் பாலாஜியின் கையிலிருந்த கத்தி தவறுதலாக தனுஷின் முன்கையில் விழுந்துவிட்டது.
அருகிலிருந்த மருத்துவமனைக்கு தனுஷ் அழைத்து செல்லப்பட்டு அவருக்கு முதலுதவியும் அளிக்கப்பட்டது. தனுஷ் இப்போது நலமாக இருந்தாலும் சில நாட்கள் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
பொல்லாதவன் திரைப்படத்தில் தனுஷ் மற்றும் திவ்யா நடிக்கிறார்கள்.