August 27, 2007
முன்னதாக வித்தகன் என்று பெயரிடப்பட்டிருந்த விஜயகாந்தின் 150வது திரைப்படம் இப்போது அரசாங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை மாதேஷ் இயக்குகிறார். காவல்துறை பயிற்சி கல்லூரியில் பணிபுரியும் நேர்மையான பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய்காந்த்.
கதாநாயகிகளாக நவ்நீத் கௌர், செரில் பிரிண்டோ என்ற இரு புதுமுகங்கள் நடிக்கின்றனர்.
இசை ஸ்ரீகாந்த் தேவா. ஒளிப்பதிவு A. வெங்கடேஷ். சண்டை அமைப்பு ராக்கி ராஜேஷ்.