August 27, 2007
தயாரிப்பாளர் A.L. அழகப்பனின் மகனும் சமீபத்திய அஜித்தின் வெற்றி படம் கிரீடத்தின் இயக்குநர் விஜயின் சகோதரருமான உதயா மற்றும் கீர்த்திகா திருமண வரவேற்பு நேற்று ஆகஸ்டு 25, 2007 அன்று கிண்டி ரேஸ் கோர்ஸில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் விக்ரம், விஜய்காந்த், ஷாம், கருணாஸ், சத்யராஜ் என பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். தவிர எண்ணற்ற தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கூட நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மகிழ்ச்சியான மணவாழ்வு வாழ மணமக்களை வாழ்த்துகிறது கலாட்டா.காம்.