August 29, 2007
அறுவோணம் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் தோழா திரைப்பட தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த திரைப்படத்தில் நிதின் சத்யா, பிரேம்ஜி, அஜய்ராஜ், விஜய், சாஹித்யா, ஜெனிஃபர், மற்றும் லக்ஷணா நடிக்கின்றனர். இயக்கம் N. சுந்தரேஸ்வரன். ஜாலியான நண்பர்கள் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட சம்பவத்தால் தலைகீழாக மாறுவதே படத்தின் கதை.
திரைப்படத்தை M. பழனி, M. சுரேஷ்குமார், V. பாஸ்கரன், மற்றும் P. பரமசிவம் இணைந்து தயாரிக்கிறார்கள்.
திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரோடு விழாவில் S.P.B. சரணும் கலந்துகொண்டார்.