August 29, 2007
மம்முட்டி, அர்ஜுன் நடிக்கும் அறுவடை திரைப்படத்தில் சினேகா நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தில் சினேகா ஒரு பைலட்டாக நடிக்கிறார். இதற்காக பொருத்தமான உடைகள் தேர்ந்தெடுப்பதில் தீவிர கவனம் செலுத்துகிறார் சினேகா. இந்த கதாபாத்திரத்துக்காக நவீனமாக மாடர்னாக மாறிவிட்டார் சினேகா.
அரவிந்தம் திரைப்படத்தை இயக்கிய நாகராஜ் அறுவடை திரைப்படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவு ராஜேஷ் யாதவ்.
அறுவடை தவிர இப்போது நடிகர்-இயக்குநர் சேரனுடன் பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் சினேகா.