August 30, 2007
அரவிந்த் இயக்கும் அறுவடை திரைப்படம் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி. இரு மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தின் மலையாள பெயர் வந்தே மாதரம்.
பங்கஜ் ஃபிலிம்ஸ் சார்பில் ஹென்றி தயாரிக்கும் அறுவடை திரைப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் சிறப்பு காவல் துறை அதிகாரியாக அர்ஜுனும் நடிக்கிறார்.
அறுவடை திரைப்படத்தில் கோபிகிருஷ்ணன் என்ற உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார் மம்முட்டி. இவரின் பைலட் மனைவியாக சினேகா நடிக்கிறார். இவர்கள் மண வாழ்க்கை குழந்தை இல்லாததால் சதோஷமற்று இருக்கிறது. ASPயாக முக்கியமான<