கௌபாய் மாதிரி கனிகா இப்போதெல்லாம் கௌ-கர்ள்! பழசை ராஜா திரைப்படத்துக்காக குதிரையேற்றம் உட்பட பல தீவிர பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார் கனிகா.
குதிரையேற்ற பயிற்சிக்காக கடின உழைப்பாளி கனிகா காலையில் 5.30க்கே எழுந்து சென்னையில் உள்ள மெட்ராஸ் ரைடிங் அகடமியின் குதிரை லாயத்தில் ஆஜராகிவிடுகிறார். கனிகா பயிலும் குதிரையின் பெயர் லிங்கன். ஆரம்பத்தில் பிரச்சனை செய்தாலும் இப்போது லிங்கன் கனிகாவின் தோஸ்த். பழசை ராஜாவில் கனிகாவுக்கு டூப்பே தேவைப்படாது போல.