August 31, 2007
உயரமான, கறுப்பான, களையான நடிகர் விஷால் இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
வேதம், ஏழுமலை போன்ற திரைப்படங்களில் அர்ஜுனுடன் உதவி இயக்குநராக திரையுலகிற்குள் வந்தவர் விஷால். ரீமா சென்னுடன் விஷால் அறிமுகமான செல்லமே திரைப்படம் அவருக்கு நல்ல ஆரம்ப அடையாளமாக அமைந்தது. தொடர்ந்த சண்டைக்கோழி, திமிரு, தாமிரபரணி ஆகிய திரைப்படங்களும் வெற்றி திரைப்படங்களாக அமைந்தன.
விஷால் ஒரு ஆக்ஷன் ஹீரோ. கதைகளை பொறுத்தே திரைப்படங்களை தேர்ந்தெடுக்கிறார் விஷால். விஷால் இப்போது நயன் தாராவுடன் சத்யம், பிரியாமணியுடன் மலைக்கோட்டை ஆகிய திரைப்படங்களில் நடிக்கிறார்.