உற்சாகம் பாடல்கள் அனைத்தும் ஏக பிரபலம். இசையும் விற்று தீர்ந்துவிட்டது. உற்சாகத்துக்கு ரஞ்சித் பரோட் அமைத்திருக்கும் இசைக்கு ரசிகர்களிடம் எக்கச்சக்கமான வரவேற்பு.
உற்சாகம் திரைப்படத்துக்கு 'U' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. திரைப்படம் ஆகஸ்டு 31 அன்று தமிழகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
உற்சாகம் நிச்சயம் ஒரு வெற்றி படமாக அமையும் என சொல்லும் இயக்குநர் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக உற்சாகம் திரைப்படம் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.