August 31, 2007
தமிழ் பின்னணி பாடகியான சின்ன சாம்பியன் ஜனனியின் இசை ஆல்பம் ஒன்று ஆகஸ்டு 28 அன்று வெளியிடப்பட்டது. ஜனனி ஐந்து வயது முதலே கச்சேரிகள் செய்து வரும் ஒரு சிறப்பான பாடகி.
ஜனனியின் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம், கந்த சஷ்டி கவசம் CDக்களை செவாலியே Dr. M. பாலமுரளி கிருஷ்ணா வெளியிட முதல் பிரதியை 'இசை பேரொளி' நெய்வேலி சந்தானம் பெற்றுக்கொண்டார்.
இசை ஆல்பத்தை J.S.J ஆடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
'பூங்காற்று' என்ற பெயரில் முன்னதாக தமிழ் பாப் ஆல்பம் ஒன்றையும் ஜனனி வெளியிட்டுள்ளார். பல விளம்பர பாடல்களையும் பாடியுள்ளார் ஜனனி.