August 31, 2007
தான் 'இளைய தளபதி' என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறார் டாக்டர் விஜய்.
லக்ஷ்மி திரையரங்கில் நேற்று நடைபெற்ற போக்கிரி திரைப்பட 126ம் நாள் விழாவில் பேசிய விஜய், தன்னை டாக்டர் விஜய் என்று அழைக்காமல் 'இளைய தளபதி' என்றே அழைக்கும்படி தன் ரசிகர்களை கேட்டுக்கொண்டார். ஆகஸ்டு 27 அன்று MGR பல்கலைக்கழகம் விஜய்க்கு டாக்டர் விருதளித்து கௌரவித்தது. போக்கிரி வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் விஜய் நன்றி கூறினார். ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க போக்கிரி திரைப்படத்தின் 'ஆடுங்கடா' பாடலையும் விஜய் பாடினார்.
விஜயின் நடிப்பு MGRன் பாணியில் அமைந்திருப்பதாக தயாரிப்பாளர்கள் கவுன்சில் தலைவர் திரு.ராமநாராயணன் குறிப்பிட்டார். வ