September 21, 2007
விஷாலுக்கு அவரது ரசிகர்கள் 'புரட்சி தளபதி' என்ற பட்டத்தை அளித்துள்ளனர்.
விஷால்-பிரியா மணி நடிப்பில் வரவிருக்கும் மலைக்கோட்டை திரைப்படத்தில் இந்த ஆக்ஷன் நடிகர் காமெடியிலும் கலக்கியிருக்கிறார்.
இவரின் முந்தைய திரைப்படங்கள் சண்டைக்கோழி மற்றும் திமிரு ஆகியவற்றால் விஷாலுக்கு ஒரு ஆக்ஷன் ஹீரோ இமேஜ். மலைக்கோட்டை திரைப்படத்தில் நகைச்சுவையிலும் அசத்தியுள்ளார் விஷால் என்று கேள்வி.
பூபதி பாண்டியன் இயக்கியுள்ள மலைக்கோட்டை செப்டம்பர் கடைசியில் திரைக்கு வருகிறது. மலைக்கோட்டை படக் குழுவினரால் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.