September 21, 2007
புன்னகைக்கும் ஒல்லியான அழகுப் பெண் வேதிகாவை விரைவில் சில சுவாரஸ்யமான திரைப்படங்களில் நாம் காணலாம். ராகவேந்திரா லாரன்ஸ் நடித்த முனி திரைப்படத்தில் அறிமுகமானவர் வேதிகா. இவர் இப்போது காளை திரைப்படத்தில் சிம்புவுடனும் சக்கரக்கட்டி திரைப்படத்தில் சாந்தனுவுடனும் நடித்துள்ளார்.
சிவகாசி திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான விஜயதசமி என்ற படத்திலும் வேதிகா நடிக்கிறார்.
வேதிகாவின் உற்சாகமான இளைய தோற்றம் அவருக்கு நல்ல பட வாய்ப்புகளை அள்ளிக் குவிக்கிறது. வேதிகா இப்போது தமிழ், தெலுங்கு இரண்டிலும் ஏகப்பட்ட பிஸி!