September 21, 2007
கௌதம் மேனனின் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஜெனிலியா, இப்போது இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை.
சூர்யா தற்போது வேல் படபிடிப்பிலும் கௌதம் மேனன், சென்னையில் ஒரு மழைக்காலம் படபிடிப்பிலும் பிஸியாக இருப்பதால் ஜெனிலியாவின் தேதிகளை பயன்படுத்திக்கொள்ள இயலவில்லையாம்.
ஜெனிலியா, வேறு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடிப்பதால் வாரணம் ஆயிரம் திரைப்படத்திலிருந்து அவர் விலகிக் கொண்டுள்ளார்.