September 21, 2007
அர்ஜுன், நிலா, வடிவேலு நடித்துள்ள சமீபத்திய மருதமலை தெலுங்கில் சிங்கமலை என்று டப்பிங் செய்யப்படுகிறது.
ரொமான்ஸ், காமெடி எல்லாம் இருக்கும் ஆக்ஷன் படமான மருதமலை ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இருப்பதாக வியாபார வட்டாரம் தெரிவிக்கிறது. குறிப்பாக அர்ஜுன், வடிவேலு இடம்பெறும் காமெடி காட்சிகள் படத்தில் சிறப்பாக பேசப்படுகிறது. நேர்மையான காவல்துறை அதிகாரியாக வரும் அர்ஜுன் மருதமலைக்காக பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார்.
தமிழ், கன்னட திரையுலகம் போல் தெலுங்கிலும் அர்ஜுனுக்கு இருக்கும் ரசிகர்கள் காரணமாக மருதமலை, சிங்கமலையாக அவதரிக்கிறது.