September 21, 2007
நடிகராக மாறியுள்ள இயக்குநர் சுந்தர் C., கோபிகா, பிரகாஷ்ராஜ் நடித்துள்ள வீராப்பு திரைப்படம் வெற்றிகரமாக 50 நாட்களை எட்டியுள்ளது.
ஸ்படிகம் என்ற மலையாள திரைப்படத்தின் ரீமேக்கான வீராப்பு கொள்கை பிடிப்புள்ள ஒரு அப்பாவுக்கும் அவரின் உதவாக்கரை மகனுக்கும் இடையே உள்ள உறவை சித்தரிக்கிறது.
தலைநகரம் திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சுந்தர் C.யின் இரண்டாவது திரைப்படமான வீராப்பு அவருக்கு கதாநாயக அந்தஸ்தை உறுதி செய்திருக்கிறது. சுந்தர் C. இப்போது வரிசையாக பல படங்களில் நடிக்கிறார். அவர் ஒரு வெற்றிகரமான கமர்ஷியல் கதாநாயகன்தான்.