September 21, 2007
கோலிவுட்டின் அரசி அசின் வழக்கம் போல எக்கச்சக்க பிஸி!
சூர்யாவுடன் வேல் படபிடிப்பை முடித்துள்ள அசின் கமல் ஹாஸனின் தசாவதாரம் இறுதிக்கட்ட படபிடிப்பில் இருக்கிறார்.
பாலிவுட்டிலும் அசினுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. இவர் இப்போது அமீர் கானுடன் கஜினி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் சில ஹிந்தி திரைப்படங்களிலும் அசின் ஆர்வம் காட்டுகிறார்.
சமீபத்திய ஹிட் படம் போக்கிரியில் அசினின் நடிப்பும் நடனமும் இன்னமும் கோலிவுட்டின் பரபரப்பாக திகழ்கிறது.
தமிழ் ரசிகர்கள் அசினின் படங்களுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.