சேரனின் தவமாய் தவமிருந்து திரைப்படத்தில் அறிமுகமானவர் பத்மப்பிரியா. படம் நல்ல செய்தியுடன் கூடிய பொழுதுபோக்கு படமாக வரவேற்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வசந்தின் சத்தம் போடாதே படத்தில் நடித்துள்ளார் பத்மப்பிரியா. இதில் இவரின் பானு கதாபாத்திரம் மிக முக்கியமானது. இந்த கதாபாத்திரத்துக்கு பத்மப்பிரியா தன் நடிப்பால் பட்டை தீட்டியிருக்கிறார்.
சில சுவாரஸ்யமான கதாபாத்திரங்களை எதிர்நோக்கியுள்ளார் பத்மப்பிரியா. இவர் நடிப்பில் வரவுள்ள திரைப்படம் மிருகம். இதன் கதை மிக வித்தியாசமானது.