September 21, 2007
நடிப்பிலிருந்து அரசியலில் நுழைந்து இன்னமும் நடிகராக இருக்கும் சரத்குமார், தன் அரசியல் நுழைவிற்கு பிறகு முதன் முதலாக திரைக்கு வரும் தன் திரைப்படம் நம் நாடு குறித்து மிக எதிர்பார்ப்பிலிருக்கிறார். நம் நாடு, லயன் என்ற மலையாள படத்தின் ரீமேக் ஆகும்.
இது காவல் துறை அதிகாரியின் கதையல்ல. பதிலாக படத்தில் அரசியல் வாசனை. ஒரே அரசியல் கட்சியில் இருந்தாலும் வேறுபட்ட கருத்துக்கள் கொண்ட ஒரு தந்தை-மகன் உறவை சித்தரிக்கிறது நம் நாடு. படம் எந்த ஒரு உண்மை சம்பவத்தையோ நபர்களையோ அடிப்படையாக கொண்டு அமையவில்லை என்று உறுதியாக சொல்கிறார் சரத்குமார்.
அரசியலில் தீவிரமாக இறங்கிவிட்டதால் சரத்தின் சினிமா பயணம் முடிவை நெருங்க