அலைகள் ஓய்வதில்லை புகழ் நடிகர் கார்த்திக் சில கால அரசியல் கலாட்டாக்களுக்கு பிறகு மீண்டும் திரைப்படங்களுக்கு திரும்பியுள்ளார். ஆனால் இந்த் முறை தன் மகன் கௌதமை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் கார்த்திக்.
முன்னதாக கௌதமும் ராதாவின் மகளும் ஒரு திரைப்படத்தில் ஜோடியாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. இப்படம் இன்னும் முடிவாகிவிட்டதா இல்லை கைவிடப்பட்டதா என்று இன்னும் சரிவரத் தெரியவில்லை.
ஆனால் கார்த்திக் பல இயக்குநர்களை சந்தித்து தன் மகனை அறிமுகப்படுத்துவதற்கு ஏற்ற கதைக்காக பல கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறார்.