September 25, 2007
தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் தன் மகன் மனோஜ் K. பாரதியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார் இயக்குநர் K.பாரதிராஜா. தொடர்ந்து கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், ஈர நிலம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார் மனோஜ். அப்பாவின் அடிச்சுவட்டில் இப்போது நடிகர் மனோஜ் ஒரு புதிய அவதாரம் எடுக்கிறார். பசும்பொன், தமிழ்ச்செல்வன், அந்திமந்தாரை ஆகிய திரைப்படங்களில் அப்பாவுக்கு உதவியாக பணியாற்றிய மனோஜ், இப்போது தனியே திரைப்படம் இயக்கத் தயாராகிவிட்டார்.
அப்பாவிடம் உதவியாளராக பணியாற்றிக் கற்றுக்கொண்டது தனக்கு நல்ல தகுதியை கொடுத்திருப்பதாக மனோஜ் நம்புகிறார். அப்பாவைப் போல அல்லாமல் தனக்கென தனி பாணி உள்ளதாக சொல்லும் மனோஜ் அது