திமிரு இயக்குநர் தருண் கோபியும் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவும் காளை திரைப்படத்துக்காக ஒன்றாக இணைந்துள்ளனர். இது போன்ற இளம் திறமைசாலிகள் ஒன்றாக அளிக்கப் போகும் விருந்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் கருத்து வேற்பாடு காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே சிறு சிக்கல் என்பது புதிய செய்தி. கோபப்பட்ட சிம்பு தருணை அடித்துவிட்டதாக சொல்கிறார்கள்.
ஆனால் இது சிம்புவுடன் தனது நட்பின் மேல் பொறாமை கொண்ட சிலர் எழுப்பிய வதந்தி இது என்று தருண் தெளிவாக தெரிவிக்கிறார். வியாதியை பரப்பும் பூச்சிக்ளைப் போல ஏன்தான் சிலர் இப்படி வதந்திகளை பரப்புகிறார்களோ தெரியவில்லை.