நான் கடவுள் திரைப்படத்திலிருந்து கார்த்திகாவை விலக்கிய பிறகு அவருக்கு பதிலாக ஒல்லி அழகுப் பெண் பூஜாவை ஒப்பந்தம் செய்துள்ளார் பாலா. இப்போதைக்கு இது ஒன்றுதான் பூஜா நடிக்கும் தமிழ் படம். பூஜாவுக்கு வாய்ப்புகள் இல்லை என்று இல்லை. சரியான கதாபாத்திரங்கள் அமையவில்லை. சிங்கள திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பூஜா நல்ல கதாபாத்திரங்களைத் தரும் தமிழ் படங்களில் மட்டும் நடிக்கப் போவதாக கூறியுள்ளார். இதனால்தான் பாலாவின் படத்தில் நடிக்கிறாரோ பூஜா? பாலா மேல் உள்ள நம்பிக்கையால்தான் நான் கடவுளில் நடிக்க ஒத்துக்கொண்டுள்ளார் பூஜா. பூஜாவின் நம்பிக்கை வீண் போகாது என்று நம்புவோம்.