படம் திரைக்கு வரும் முன்பே சிவாஜி 100 நாட்கள் ஓடும் என அனைவருக்கும் தெரியும். செப்டம்பர் 22, சனிக் கிழமை சிவாஜியின் 100வது நாள். இந்த கொண்டாட்டம் எங்கே எப்படி இருக்கும் என எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், சிவாஜி இன்னொரு சாதனையும் செய்திருக்கிறார். அதே நாள் கல்ஃபோர்னியா, ஃப்ரெமோண்ட், பார்க் திரையரங்கில் சிவாஜி 70 நாட்களைக் கொண்டாடுகிறார். அமெரிக்காவில் 70 நாட்கள் ஓடும் முதல் தமிழ் திரைப்படம் சிவாஜி. இந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெறும் அனைவருக்கும் சிவாஜி நினைவு பொருட்கள் (டி-ஷர்ட் மற்றும் ஆடியோ CD?), வழங்கப்படும். சூப்பர் ஸ்டார் பற்றி மற்றும் சிவாஜி உருவான விதம் பற்றி சிறப்பு வீடியோ காட்சியும் ரசிகர்களுக்க