September 25, 2007
பிரபல நடிகர் விஜயன்(63) இன்று காலை மாரடைப்பால் காலமானார்.
1978ல் பாரதிராஜாவின் கிழக்கே போகு இரயில் திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து நடிகர் விஜயன் தமிழிலும் மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். யதார்த்தமான, உணர்வுபூர்வமான நடிப்புக்கு பெயர் பெற்ற நடிகர் விஜயன் கதாநாயகனாகவும், வில்லனாகவும் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் விஜயனின் நடிப்புத் திறமைக்கு உதிரிப் பூக்கள் திரைப்படம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. நிறம் மாறாத பூக்கள், பசி, பாலைவன ரோஜாக்கள், நாயகன், ரமணா, ரன் ஆகிய திரைப்படங்களில் குறிப்பிடும்படியான கதாபாத்திரங்களில் நடித்தவர் விஜயன்.
இவர் இப்போது சுந்தர் C.யி