September 25, 2007
ஒருவன் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானவர் உன்னி மாயா. இதில் இவர் மீரா வாசுதேவனின் மகளாக நடித்தார். பிளெஸ்ஸியின் கல்கத்தா நியூஸ் என்ற திரைப்படத்தில் மீரா ஜாஸ்மினின் சகோதரியாகவும் இவர் நடித்துள்ளார்.
இப்போது நடிகைகள் மீரா ஜாஸ்மின், கோபிகா, காவ்யா மாதவன், பாவனா போல உன்னி மாயாவும் தமிழுக்கு வருகிறார். மித்தை என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் நுழைகிறார் உன்னி மாயா.
மித்தை படத்தின் இயக்குநர் அன்பு. இவர் இயக்கிய முதல் படம் பிரதி ஞாயிறு 9 முதல் 10.30 வரை. இது அன்புவின் இரண்டாவது படம். இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். ஸ்ரீரங்கா திரைப்படத்தில் அறிமுகமான சந்தோஷ், மித்தை படத்Ī