ஆழ்வார் படத்தை இயக்கியÂ செல்லா தன் அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார். இப்படத்தின் கதாநாயகன் யார் தெரியுமா? இயக்குநர் P.வாசுவின் மகன் சக்தி. தொட்டால் பூ மலரும் திரைப்படத்தில் குறிப்பிடும்படி நடித்திருந்த சக்தியின் நடிப்பு இயக்குநர் செல்லாவுக்கு பிடித்துப்போக, இப்போது சக்தியின் கையில் அவரின் இரண்டாவது திரைப்படம். செல்லாவின் அடுத்த படம் நெருப்பு கோழி. இந்த படத்துக்கு முற்றிலும் ஒரு புதிய தோற்றம தேவைப்படுவதாக சொல்லும் சக்தி அவரின் புதிய கதாபாத்திரத்துக்காக இப்போதே தயாராகத் தொடங்கிவிட்டார்.