தமிழ் திரைப்படங்களின் பெயர்கள் மாறுவது இப்போதெல்லாம் நிறைய நடக்கிறது. காரணம் எதுவாக வேண்டுமாலும் இருக்கலாம். சில சமயங்களில் படத்தின் தலைப்புகள் நாகரீகமாக இல்லாத போது அது மாற்றப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் படத்தின் பெயரில் ஆங்கில வார்த்தைகள் கலக்கப்படுவதே சிக்கலை ஏற்படுத்துகிறது. தமிழில் பெயர் கொண்ட திரைப்படங்களுக்கு 100% பொழுதுபோக்கு வரிவிலக்கு உண்டு என்பதனால் ஆங்கில வார்த்தைகள் கலந்த தமிழ் படத்தின் பெயர்கள் மாற்றப்படுகின்றன. இந்தப் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்துள்ளது இயக்குநர் ராமின் தமிழ் M.A. இந்த திரைப்படத்தின் புதிய தூய தமிழ் பெயர் கற்றது தமிழ்.