தருண் கோபிக்கு இது அதிர்ஷ்டமான காலம் போல. திமிரு திரைப்படத்தின் வெற்றி அவருக்கு சிம்புவின் காளை திரைப்பட வாய்ப்பை பெற்றுத்தந்தது. இப்போது காளை திரைக்கு வரும் முன்பே இவருக்கு மேலும் சில மகிழ்ச்சியான சேதிகள். பிதாமகன் திரைப்படத் தயாரிப்பாளர் துரை, தருண் கோபியை சமீபத்தில் சந்தித்து தன் அடுத்த தயாரிப்பை இயக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். தருணும் சம்மதம் தெரிவித்துவிட்டார். தயாரிப்பாளர் துரை அஜித்தையும் தொடர்புகொண்டு தன் அடுத்த படத்தில் நடிக்க கேட்டுக்கொண்டதாக செய்தி. ஆனால் அஜித் பில்லா பணிகளில் பரபரப்பாக இருப்பதால் இன்னும் அவரால் கதை கேட்க இயலவில்லை. துரை ஒப்பந்ததை எட்டிவிடுவாரா? தருணுக்கு பமப்