இந்திய சினிமாவில் புகழ்பெற்ற ஒரு பெயர் பிரியதர்ஷன். இவர் இப்போது பிரகாஷ் ராஜ் நடிக்கும் காஞ்சிபுரம் திரைப்படத்தை இயக்குகிறார். படத்தின் தலைப்பு சொல்வதைப் போல இப்படம் நெசவாளர்களின் வாழ்க்கை பிரச்சனைகளை அலசுகிறது. காஞ்சிபுரம் கதை பிரியதர்ஷனின் சொந்தக் கதை என்றாலும், பழைய திரைப்படங்களை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு ரீமேக் செய்வது ஒன்றும் குற்றமில்லை என்கிறார் இவர்.
ஒரு மொழியில் ஒரு படம் வெற்றியடையும்போது கதையை அப்படியே வைத்துக்கொண்டு திரைக்கதையை மட்டும் இன்னொரு மொழிக்கு எற்றது போல மாற்றினால் ரீமேக் படமும் வெற்றிபெறும் என்கிறார் பிரியதர்ஷன். எனவேதான் இவர் இப்போது சந்திரமுகி படத்தை ஹி