October 29, 2007
தயாரிப்பாளர்-நடிகர்-பாடகர் S.P.B.சரண் ஆரண்ய காண்டம் என்ற தன் அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார்.
இவரின் சமீபத்திய ஞாபகம் வருதே படத்தில் சரண், வெங்கட் பிரபு கதாநாயகர்களாக நடித்திருந்தார்கள். வெற்றிப்படம் சென்னை-600028க்கு பிறகு இவர்கள் இருவரும் ஞாபகம் வருதே படத்துக்காக இணைந்திருக்கிறார்கள். இப்படத்தில் சரணின் நடிப்பு வெகுவாக பாராட்டப்படுகிறது.
சரணுக்கு தயாரிப்பு, நடிப்பு இரண்டிலுமே ஆர்வம். இவரின் அடுத்த படம் அருண் வைத்தியநாதன் இயக்கும் அச்சமுண்டு அச்சமுண்டு. அமெரிக்காவில் நிலவும் காலநிலை காரணமாக இப்படம் சற்று தாமதமாகிறது.
இதற்கிடையே ஆரண்ய காண்டம் படப் பணிகளை ஆரம்பித்துவிடுவார சரண்.
Â