சத்யராஜ் நடிக்கும் தங்கம் திரைப்படத்தின் சண்டைக் காட்சி சமீபத்தில் புரவிப்பாளையத்தில் படம்பிடிக்கப்பட்டது.
இதற்காக 50 அடி உயரமுள்ள ராவணன் சிலை அமைக்கப்பட்டதாம். இதன் பின்னணியில் சத்யராஜ் மற்றும் வில்லன் ஷண்முகராஜன் இருவரும் சண்டை போடுகிறார்கள்.
செய்கிற நல்ல செயல்களுக்கு கிராமத்தில் நல்ல மரியாதை உள்ள சத்யராஜ் கதாபாத்திரத்தை சுற்றி சுழல்கிறது தங்கம் திரைப்படம். தங்கம் திரைப்படத்தின் கதாநாயகி மேகா நாயர். இசை ஸ்ரீகாந்த் தேவா.