October 30, 2007
தாம் தூம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் சந்தோஷ் சுப்ரமணியம் விறுவிறுப்பாக வளர்ந்து வரும் சூழலில் ஜெயம் ரவி அடுத்த படத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். இப்போதைக்கு பேராண்மை என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை அழகான இயற்கை படத்தை நமக்கு அளித்த ஜகன்நாதன் இயக்குகிறார்.
வரிச் சலுகை கிடைக்கும் சுத்த தமிழ் பெயரான பேராண்மை சுவாரஸ்யமான டைட்டிலாகவும் இருக்கிறது. ஒரு ஆணின் சிறப்பை சொல்லும் இந்த வார்த்தை திருக்குறளிலிருந்து எடுக்கப்பட்டது. புதுமையான பெயர்தான்!
கற்பு என்ற சொல்லை பெரும்பாலும் பெண்களுக்குதான் சொல்லுவோம். ஆனால் அடுத்தவர் மனைவியை எந்த கெட்ட எண்ணமும் இல்லாமல் ஒருவன் பார்க்கும்போது அநத ஆணின் க