October 30, 2007
கலாபக் காதலன் படத்தில் அறிமுகமான அக்ஷயா உளியின் ஓசை படத்தில் நடிப்பதற்காக அணுகப்பட்டுள்ளார்.
இந்தப் படம் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் வரும் ஒரு பாரம்பரிய நடனக் கலைஞர் முத்துநகை என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அக்ஷயா.
இது போன்ற ஒரு தரமான படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறார் அக்ஷயா. பயிற்சி பெற்ற பரதநாட்டியக் கலைஞரான அக்ஷயா, வினீத்துடன் நடனமாட ஆர்வத்துடன் காத்திருக்கிறார். படத்தின் இயக்குநர் இளவேனில்.
தனக்கு திரையுலகில் தேவைப்படும் ஒரு திருப்புமுனையாக உளியின் ஓசை திரைப்படம் இருக்கும் என அக்ஷயா நம்புகிறார்.